என்.எல்.சி. நிர்வாகம் நில அளவீடு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்‍கள் போராட்டம்

May 21 2022 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே, என்.எல்.சி. நிர்வாகம் நில அளவீடு பணிகளை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்‍கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை என்.எல்.சி நிறுவனம் தனது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக தேர்வு செய்து நிலங்களை எடுத்து வருகிறது. இந்நிலையில், என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் நிலம், வீட்டுமனை உள்ளிட்டவற்றை அளவீடு செய்வதற்காகவும், கணக்கெடுக்கும் பணிக்காகவும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக்‍காக போலீசாரும் வந்திருந்தனர். அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்‍கள் அனுமதிக்‍காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டுமனை மதிப்புக்‍கு அதிக பணம் தர வேண்டும், எடுக்‍கப்பட்ட நிலங்களுக்‍கு உயர்த்தப்பட்ட மதிப்பீட்டுத் தொகை வழங்கக்‍கோரி, சாலையில் அமர்ந்து முழக்‍கமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00