திருவண்ணாமலையில் விவசாயியின் வீட்டில் 15 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை : வீட்டின் கதவு, பீரோவை உடைக்காமல் கொள்ளை நடந்திருப்பதால் போலீசார் சந்தேகம்

May 21 2022 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில் விவசாயியின் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவர் காலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று பின்னர் மாலையில் வீடு திரும்பினார். வீட்டை திறந்தபோது, பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூட்டிய வீட்டை திறந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். வீடு மற்றும் பீரோ உடைக்கப்படாமல் சாவியின் மூலம் நகை, பணம் திருடப்பட்டு இருப்பதால் மணியின் உறவினர்கள் யாரேனும் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00