நெல்லை குவாரி விபத்தில் சிக்‍கியுள்ள 6-வது நபரை மீட்கும் பணி - 7-வது நாளாக களமிறங்கிய பேரிடர் மீட்புக்‍ குழுவினர்

May 21 2022 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே கல்குவாரியில் சிக்‍கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஏழாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 6 பேர் சிக்கிக்‍கொண்டனர். இதில் விஜயன், முருகன் ஆகிய இரண்டு பேர் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, செல்வம், செல்வகுமார், முருகன் ஆகிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பாறைகளின் இடிபாடுகளுக்‍குள் சிக்‍கியுள்ள ஆறாவது நபரான ராஜேந்திரன் என்பவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ​தொடர்ந்து 7வது நாளாக ராஜேந்திரனை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்‍ குழுவினர் இன்றும் ஈடுபட்டுள்ளனர். வெடிவைத்து தகர்க்‍கப்பட்ட பாறை கற்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு மீண்டும் துளையிட்டு பாறைகளை உடைக்க வெடி வைக்க உள்ளனர். இந்நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்ட கல் குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகிய இருவரும் நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00