உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடை கழிவை துப்புரவுப் பணியாளர்கள் கைகளால் அள்ளும் அவலம் - காண்போரை முகம் சுளிக்க வைக்கும் தாராபுரம் சம்பவத்தின் வீடியோ பதிவு
May 13 2022 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் சாக்கடை கழிவை அள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் முன்பு துப்புரவு பணியாளர் ஒருவர், எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாக்கடை கழிவை கைகளால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.