கன்னியாகுமரி: நடுக்காட்டில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம்
Jan 18 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் விளாமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் திருமதி ஸ்ரீலேகா என்பவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரும் வழியில் பிரசவ வலி அதிகமானது. யானைகள் நடமாட்ட மிகுந்த நடுக்காட்டு பகுதியில் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அவசரகால மருத்துவ உதவியாளர் சரஸ்வதி அந்தப் பெண்மணிக்கு பிரசவம்பார்த்தார். நடுக்காட்டில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.