செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி​வைக்‍கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாதிப்பு - வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற பொறியியல் மாணவர்கள் வேலையில் சேருவதில் சிக்‍கல்

Jan 18 2022 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
செமஸ்டர் தேர்வு ஒத்தி​வைக்‍கப்பட்டுள்ளதால், வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற பொறியியல் மாணவர்கள் வேலையில் சேருவதில் சிக்‍கல் எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தின் சென்னை வளாகத்தில் மட்டும், வளாக நேர்காணல் வாயிலாக, இறுதி ஆண்டு படிக்கும் ஆயிரத்து 700 மாணவர்கள் பல்வேறு தனியார் பெரு நிறுவன பணிகளுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஆகஸ்டு மாதத்துக்‍குள் பட்டம் பெற்று, பணியில் சேர வேண்டியது அவசியம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளே இன்னும் நடைபெறவில்லை. அதன் பிறகு பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தேர்வு ஏப்ரலில் நடத்த வேண்டி உள்ளது.

ஜனவரி 20 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு பொறியியல் கல்லுாரி மாணவர்கள், கவலை அடைந்துள்ளனர். சரியான காலத்தில் பணிகளில் சேர முடியுமா அல்லது வாய்ப்பு பறிபோகுமா என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இறுதி ஆண்டு மாணவர்களுக்காவது, டிசம்பர் தேர்வை விரைந்து முடித்து, இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00