தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வாங்க கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்‍க வேண்டியது கட்டாயமில்லை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை பதில்

Dec 8 2021 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வாங்க கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்‍க வேண்டியது கட்டாயமில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்‍க தடுப்பூசி செலுத்திக்‍கொள்வதற்காக தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான விழிப்புணர்வும், மக்‍களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், மின்சாரத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள், ஊதியம் பெறுவதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று சுற்றறிக்‍கை வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது திரும்பப்பெறப்பட்டது. தடுப்பூசி கட்டாயமா? சுயவிருப்பமா? என்ற அரசின் தெளிவற்ற நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, தென்காசியைச் சேர்ந்த திரு.ரஞ்சித் என்பவர், தமிழக சுகாதரத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தடுப்பூசி, பயனாளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இலவசமாக செலுத்தப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்‍கும், பேருந்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி கட்டாயமில்லை என்றும், சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍கொண்டவர்களுக்‍கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்‍கு மருந்து நிறுவனமோ, அல்லது அரசாங்கமோ இழப்பீடு வழங்குமா? என்ற கேள்விக்கு, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் அதற்கான உத்தரவு ஏதும் பிறப்பிக்‍கப்படவில்லை என்று சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00