சுற்றுலா மையமான விவேகாந்தர் நினைவு மண்டத்திற்கு படகு போக்‍குவரத்து ரத்து - பயணிகள் பெரும் ஏமாற்றம்

Oct 15 2021 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்‍கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில், சர்வதேச சுற்றுலா மையமான விவேகாந்தர் நினைவு மண்டத்திற்கு படகு போக்‍குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி மூடப்பட்டிருந்த அனைத்து சுற்றுலா மையங்கள் இன்றுமுதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சாலையோரத்தில் வைக்‍கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளனர். வழக்கமாக விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் குமரியில் இன்று வெகு குறைவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இதனால், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிவற்றை சென்று பார்வையிட வசதியாக இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதிவரை சுற்றுலா பேருந்துகள் இயக்கம் ரத்து என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் படகுகளில் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00