கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்தின் பிற பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Oct 15 2021 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா - லடச்சத்தீவு கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்‍கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00