திருச்சியில் கனமழையால் குளக்கரை உடைந்து வெள்ளப்பெருக்கு : 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துக் கொண்டதால் மக்கள் அவதி

Sep 25 2021 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மணப்பாறையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் குளம் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள அப்பு அய்யர் குளத்தின் ஒரு பகுதி கரை முழுவதுமாக உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைபுரண்டு ஓடிய தண்ணீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ராஜீவ் நகர், இந்திரா நகர், சேதுரெத்தினபுரம், முத்தன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துக் கொண்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம்போல் தேங்கி உள்ள மழைநீரால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் காணப்படுகிறது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துக் கொண்ட மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00