தேவகோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் அடி, தடி - நாற்காலிகளை வீசித் தாக்‍கியதில் உறுப்பினர்கள் இருவருக்‍கு காயம்

Sep 25 2021 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்‍ கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.

தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்‍ கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்திக் சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. மாங்குடி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு. கரிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தேவகோட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து தங்களை ஒதுக்‍குவதாக குற்றஞ்சாட்டி, வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை தூக்‍கி வீசி தாக்‍கிக்‍ கொண்டனர். இதில் இருவருக்‍கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கார்த்தி சிதம்பரமும், சட்டமன்ற உறுப்பினர்களும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று கடந்த வாரம் திருப்புவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ப. சிதம்பரத்துடன் கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறி தற்போது வரை எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாதது குறிப்பிடதக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00