காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் : நீண்டகாலம் வாழமுடியாது என்ற விரக்‍தி - கணவன் வெளியிட்டுள்ள வீடியோ

Sep 25 2021 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
உடல்நலப் பாதிப்பு காரணமாக, காதல் மனைவியுடன் நீண்டகாலம் வாழமுடியாது என்ற விரக்‍தியில், பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக கணவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பூங்குளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், கொட்டாவூரைச் சேர்ந்த திவ்யா என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் வர்ஷினி ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலுக்‍கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, மனைவி திவ்யாவையும், குழந்தை வர்ஷினி ஸ்ரீயையும் சத்தியமூர்த்தி அழைத்துச் சென்றுள்ளார். திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, திவ்யா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்‍ கொளுத்திவிட்டு, தனது குழந்தையுடன் சத்தியமூர்த்தி மாயமாகிவிட்டார். திவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்‍கம்பக்‍கத்தினர், உடல் முழுவதும் கருகிய நிலையில் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்‍கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்‍கு தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. இதனிடையே, சிறுநீரகப் பாதிப்பு தனக்‍கு தீவிரமடைந்துள்ளதால், மனைவியுடன் நீண்ட காலம் சேர்ந்து வாழமுடியாது என்ற கவலையால், தனது மனைவிக்‍கு தூக்‍க மாத்திரை கொடுத்து அவர் மயக்‍கமடைந்த நிலையில், பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக வீடியோ பதிவில் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்து துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கந்திலி காவல்துறையினர், தனது குழந்தை வர்ஷினிஸ்ரீயுடன் தலைமறைவாகிவிட்ட சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00