மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்‍கல்வித்துறை வலியுறுத்தல்

Sep 25 2021 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆன்லைன் விளையாட்டுக்கள் பேரழிவைத் தரும் என எச்சரித்துள்ள பள்ளிக்‍கல்வித்துறை, மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள் எந்த ஆப்-களை உபயோகிக்கிறார்கள், எந்த ஆப்-ல் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்‍கொண்டுள்ளது. தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது - ஆப்-களை விலைக்கு வாங்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், OTP-ஐ பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது - ஆப், இணையதளம் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்யவிடக்கூடாது - இணையதளத்திலோ, அப்ளிகேஷனிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும் - மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த ஏதுவாக பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால் உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினிகளை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்கள், ஆசிரியர்களிடத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00