வங்கக்‍ கடலில் புயல் உருவானதன் எதிரொலி - பாம்பன், கடலூர், நாகை, எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்‍கை கூண்டு ஏற்றம்

Sep 25 2021 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், நாகப்பட்டினம், பாம்பன், கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்‍கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே 26ம் தேதி காலை கரையை கடக்கும் என்பதால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் தூர எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

கலிங்கப்பட்டிணத்திற்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர், எண்ணூர் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்‍கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00