எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் : சுற்றுச்சூழல்துறை வழங்கிய அனுமதி 6 மாதம் நிறுத்தி வைத்து உத்தரவு

Sep 18 2021 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள எண்ணூர் அனல்மின் நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்து, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு விசாரித்தது. எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம் தொடர்பாக இன்னும் 2 மாதத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துகளை பெற்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும், அதன் பின் 6 மாதத்திற்குள் மக்களின் கருத்துக்களை பரிசீலித்து உரிய கட்டுப்பாடுகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00