தமிழக சிறைகளில் தண்டனை பெற்று மேல்முறையீடு செய்ய முடியாமல் இருக்‍கும் நபர்களுக்‍கு சட்ட உதவி அளிக்‍க நடவடிக்‍கை - அறிக்கை தாக்‍கல் செய்யஅளிக்க வேண்டும் என அரசுக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Sep 18 2021 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள சிறைகளில் தண்டனை பெற்று மேல்முறையீடு செய்ய முடியாமல் இருக்‍கும் நபர்களின் எண்ணிக்‍கை குறித்தும், அதில் எத்தனை பேருக்கு சட்ட உதவி தேவைப்படுகிறது என்பது குறித்தும், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தெரிவித்துள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த பதிபூரணம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றபோது, அப்பெண் கீழே விழுந்து உயிரிழந்ததாக, கடந்த 1996ம் ஆண்டு, நெல்லை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், தனக்‍கு ஆயுள் தண்டனை வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்‍கில் முறையாக சாட்சியங்களை விசாரிக்‍காமல் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறியுள்ள அவர், இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்னும் நிலுவையில் இருக்‍கும் நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ஜாமீன் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் நிஷாபானு அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, இந்த வழக்‍கு தொடர்பாக காணொலி வாயிலாக, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் திரு. ராஜசேகர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதன் பின்னர், தமிழகத்தில் உள்ள சிறைகளில் தண்டனை பெற்று மேல்முறையீடு செய்ய முடியாமல் இருக்‍கும் நபர்களின் எண்ணிக்‍கை குறித்தும், அதில் எத்தனை பேருக்கு சட்ட உதவி தேவைப்படுகிறது என்பது குறித்தும், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00