மாமல்லபுரம் அருகே சாலைத்தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்து - பெண் ஒருவர் பலியான சம்பவம் - நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்‍குப்பதிவு

Jul 25 2021 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, சாலைத்தடுப்பில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில், நடிகை யாஷிகா படுகாயமடைந்தார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாமல்லபுரத்தை அடுத்துள்ள கிழக்‍கு கடற்கரைச் சாலை, சூளேரிக்‍காடு பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலைத்தடுப்பில் மோதி, அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள், காரில் இருந்தவர்களை மீட்டு, பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தனியார் தொலைக்‍காட்சி தொடர் பிரபலம் நடிகை யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் செய்யத், அமீர் ஆகியோர் காரில் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்கள் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி, விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர், அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக, நடிகை யாஷிகா மீது மாமல்லபுரம் போலீசார், 2 பிரிவுகளின்கீழ் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00