அரியலூர் மாவட்டத்தில் கடைசி காலத்திலும் இணைபிரியாமல் உயிரிழந்த இந்து- இஸ்லாமிய நண்பர்கள்
Apr 8 2021 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இந்து- இஸ்லாமிய நண்பர்கள் இருவர், தங்களது கடைசி காலத்திலும் இணைபிரியாமல் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
ஜூபிலி ரோட்டில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவர், கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்த ஜெயிலாபுதின் என்பவர், அரிசி மண்டி நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சுமார் 40 ஆண்டுகளாக இணைபிரியாமல் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவரும் வீட்டு சுபகாரியங்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் தங்களது இன்ப, துன்பங்களை பகிர்ந்து வந்துள்ளனர். இதனிடையே, இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அருகருகே படுக்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவருமே அரை மணி நேரத்திற்குள் ஒருவர்பின் ஒருவராக உயிரிழந்தனர். மதங்களைக் கடந்து இருவரின் நட்பானது போற்றுதலுக்குரியதாக இருந்ததாக, இருவரின் நட்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.