சேலத்தில் கோவில் நிலம் விற்பனையா? - நடவடிக்கை எடுக்க பதிவுத்துறைக்கு உத்தரவு
Apr 8 2021 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருமாள் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவில் நிலம் தனிநபருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.