45 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்
Apr 8 2021 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
45 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்;
நீச்சல் குளங்களில் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி;
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் - அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டும் - தடுப்பூசி போட்டுக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
45 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி;
ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பயணிகளுக்கு மட்டுமே பயணிக்கலாம்;
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பாஸ் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி, நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.