அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
Mar 9 2021 7:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில், அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் திரு.டி.எஸ். வக்கீல் அகமது, தமிழகப் பொறுப்பாளர் திரு.முகமது ரஹமதுல்லா தாயப் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, கழக துணைப் பொதுச்செயலாளர்கள், திரு.பி.பழனியப்பன், திரு.ரெங்கசாமி, திரு.ஜி.செந்தமிழன், கழகப் பொருளாளர் திரு.ஆர். மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் திரு.டி.எஸ். வக்கீல் அகமது, தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.