திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து குழப்பம் - திமுக சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நிர்பந்தம்
Mar 8 2021 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருவதால், தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளுக்கு இன்னமும் தொகுதிகள் ஒதுக்கப்படததால் அக்கட்சிகள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளன. மேலும் அக்கட்சிகளை தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது. எஸ்டிபிஐ, மனித நோய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவாத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அக்கட்சிகளுக்கு எத்தனை தொகுகளை ஒதுக்குவது என்ற குழப்பத்தில் திமுக உள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளை, தனது சின்னத்தில் போட்டியிட வைத்து விட்டு அதற்காக தொகுதிகளை விட்டு கொடுப்பதும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.