தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் ரொக்‍கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Mar 8 2021 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் ரொக்‍கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பட்டியலிட்டார். அதில், சட்டமன்ற தேர்தலுக்‍காக தமிழகத்தில் 76 வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் 88 ஆயிரத்து 937 வாக்குசாவடிகள் அமைக்‍கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது - தேர்தல் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் பொதுமக்‍கள் உடனடியாக "1950" தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் - மேலும், 180042521950 என்ற தொலைபேசி எண் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கலாம் - ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் "கையுறை" தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்படும் - வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்‍ கவசம் அணிய வேண்டும் - கடைசி 1 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - 150 பொது தேர்தல் பார்வையாளர்கள், 40 சிறப்பு காவல்துறை பார்வையாளர்கள், 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர் - வாக்கு பெட்டிகள் இருக்கும் அறையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும் - 24 மணி நேரமும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் - தமிழகத்தில் வாக்குசாவடி தேர்தல் பணியாளர்களாக 4 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேர் பணியில் ஈடுபடுவர் என திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் ரொக்‍கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திரு.சத்யபிரதா சாகு மேலும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00