அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் பிரச்சினைக்கு மத்தியில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவின் தமிழக வருகை ரத்து - அஇஅதிமுக கூட்டணியில் பா.ஜ.க. தொகுதிகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் திடீர் முடிவு
Mar 8 2021 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்பினர் இடையே கடும் மோதல் எழுந்துள்ளதால், பட்டியல் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. வேட்பாளர் தேர்வில் இ.பி.எஸ். தரப்புக்கு 50 சதவீதமும், ஓ.பி.எஸ். தரப்புக்கு 50 சதவீதமும் என்ற நிலைப்பாட்டில், இ.பி.எஸ். தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் குழப்பம் நிலவுகிறது. அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். வீடுகளில் அவரவர் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இ.பி.எஸ். இல்லத்திலிருந்து தூதுவராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஓ.பி.எஸ். இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே நிலவும் மோதல் போக்கினால், அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.