தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை : உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரொக்கம், பொருட்கள் பறிமுதல்

Mar 7 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்‍கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் ரொக்‍கம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை சேர்வைக்காரன் பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த மிளகாய் வியாபாரிகளின் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் இன்றி, 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், சார் ஆட்சியர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் R. பொன்னாபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு கிலோ பழைய வெள்ளி கொலுசுகள் மற்றும் 90 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00