கூகுள் பே, போன் பே மூலம் பணப்பரிவர்த்தனையை தடுக்க நடவடிக்கை - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Mar 5 2021 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர். இதனிடையே, கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் செயலி மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதை தவிர்க்க வங்கி பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், தமிழக தேர்தலை முன்னிட்டு நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் வரும் திங்கட்கிழமை தமிழகம் வரவுள்ளதாகவும், திரு.சத்யப்பிரதா தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில், 15 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மட்டும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், திரு.சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00