தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையையொட்டிய 5 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உதகையில் சந்திப்பு - சட்டமன்ற தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கு, மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை
Mar 5 2021 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். மாவோஸ்ட் நடமாட்டத்தை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழகம் கேரளா, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள 5 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் உதகையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோத பணபரிமாற்றத்தை தடுப்பது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.