பா.ம.கவுக்கு இணையான தொகுதிகளை கேட்கும் தே.மு.தி.க : தொகுதி உடன்பாட்டில் எடப்பாடி அணியுடன் தொடர்ந்து இழுபறி - தி.மு.க-வுடன் மறைமுகமாக தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை

Mar 5 2021 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என் தே.மு.தி.க தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்‍கும் என கூறப்படுகிறது.

எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கும் அந்த எண்ணிக்‍கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 3-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அதேநேரத்தில் தே.மு.தி.க. துணை செயலாளரான எல்.கே. சுதிஷ் கூட்டணிக்காக எடப்பாடிதான் கெஞ்சிக் கொண்டிருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.இதனால் கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை விலகி தனித்து போட்டியிடுமா? என்பது பலத்த கேள்வியாக உருவெடுத்துள்ளது.

ஒருவேளை திமுக. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டால் தேமுதிக-வுக்கு 20 முதல் 25 தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு இடங்கள் உறுதியாகும் வரை, தேமுதிக - எடப்பாடி அணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00