தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து, அதிகாரிகள் நடவடிக்‍கை

Mar 4 2021 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்‍கு அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்‍கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வரவுள்ளதாகவும், செலவினப் பார்வையாளர்கள் 2 பேரும், பொதுபார்வையாளர் ஒருவரும், காவல்துறை சிறப்பு பார்வையாளர் ஒருவரும் வரவிருப்பதாகவும் கூறினார். வாக்‍குச்சாவடிகளில் முகக்‍கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்‍களிக்‍க அனுமதிக்‍கப்படுவார்கள் என்றும், தேர்தல் பணியாளர்களுக்‍கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் திரு.சத்யபிரதா சாகு தெரிவித்தார். வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார்நிலையில் இருப்பதாகவும், கொரோனா முன்னேற்பாடுகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும் பிபிஇ கிட் மூலம் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என்றும் திரு.சத்ய பிரதா சாகு குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00