விறுவிறுப்படைந்துள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்களம் - தென் மாவட்டங்களில் இன்றுமுதல் 3 நாட்களுக்‍கு ராகுல்காந்தி பிரசாரம்

Feb 27 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திரு. ராகுல் காந்தி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசிய தலைவர்கள் தமிழகத்தை நோக்‍கி படையெடுத்த வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கெனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரு. ராகுல் காந்தி இன்று மீண்டும் தமிழகம் வருகை தந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்த அவர், வஉசி கல்லூரி அரங்கில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே 'ரோடு ஷோ' நடத்தி பொதுமக்களிடையே வாக்‍கு சேகரிக்‍கிறார். தொடர்ந்து, கடற்கரை சாலை வழியாக சென்று முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் பேசுகிறார். மாலை 5 மணிக்கு, சாத்தான்குளத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இன்றைய சுற்றுப்பயணத்தின் இறுதியாக மாலை 6.15 மணிக்கு நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் திரு.ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00