பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியதற்கு நடிகர் விஜய் சேதுபதி வருத்தம்

Jan 16 2021 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியதற்கு நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்த நாளையொட்டி, பட்டாக்கத்தியால் நடிகர் விஜய் சேதுபதி கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியது யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில், பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருப்பதால், அதில் கேக் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி இது ‍போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்து‌டன் செயல்படுவதாகவும், பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00