ராமேஸ்வரத்தில் தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
Jan 16 2021 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடர் மழையால், பல இடங்களில் வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள காந்திநகர், மல்லிகா நகர், சிவகாமி நகர் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. பல இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், பல இடங்களில் வீடுகளைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும், முதியோர்களும் விடிய விடிய தூங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை பம்ப் செட் வைத்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.