சேலம் அருகே அரசு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு - திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது நேரிட்ட பரிதாபம்

Nov 27 2020 8:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் அருகே, சகோதரியின் திருமணத்திற்குச் சென்ற வாலிபர் உட்பட 3 பேர் அரசு பேருந்து மோதிய சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர், தனது சகோதரியின் திருமணத்திற்காக நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் பார்த்தசாரதியோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்றபோது அவர்களது இருசக்‍கர வாகனம் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்‍குள்ளானது. இந்த விபத்தில் பார்த்தசாரதி மற்றும் கார்த்திகேயனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஜெகதீசனும் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த இந்த சம்பவம் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00