திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க நீதிமன்றம் அனுமதி: வியாபாரிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Nov 27 2020 8:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க நீதிமன்றம் அனுமதி அளிக்‍கப்பட்டதைத் தொடர்ந்து, வியாபாரிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கொரோனாவை காரணம் காட்டி திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காந்தி மார்க்கெட்டை திறக்ககோரிய வழக்கில் நடைபெற்ற விசாரணையில், மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட தடையை விலக்கி உத்தரவிட்டதுடன், காந்தி மார்க்கெட் தொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து திருச்சி காந்தி மார்க்கெட் முன்பு ஒன்றுதிரண்ட வியாபார சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00