பெண் தொழிலாளர்களுக்‍கு பாலியல் தொந்தரவு - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு

Sep 29 2020 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெருந்துறை பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த 2 பெண் தொழிலாளர்களுக்‍கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வரவழைத்து, அவரை கட்டிப்போட்டு மிளகாய்ப்பொடி தூவி தண்டனை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அருகே பல்லடம் அடுத்த அருள்புரம் பகுதியில் உள்ள பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டையில், கடந்த 14-ம் தேதி அவிநாசி சூளை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தங்களிடம் தகாத முறையில் நடக்‍க முயன்றதால், அவரை பிடித்து வைத்திருப்பதாக, காவல் அவசர உதவி எண்ணுக்‍கு 2 பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், கட்டிப்போடப்பட்டிருந்த சிவகுமார் மற்றும் புகார் அளித்த சங்கீதா, முகமது முனீரோ ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிவகுமாரை மிளகாய்ப்பொடி தூவி, பெண்கள் தண்டனை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விசாரணையில், பெருந்துறை பனியன் நிறுவனத்தில் இம்மூவரும் பணியாற்றி வந்ததும், அந்தப் பெண்களுக்‍கு சிவகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அதனால் சிவகுமாரை கட்டிப்போட்டு தாக்‍கியதாக அப்பெண்கள் ஒப்புக்‍கொண்டனர். இதனை தொடர்ந்து சங்கீதா மற்றும் முகமது முனீரா அளித்த புகாரின் பேரில் சிவகுமாரைகைது செய்த காவல்துறையினர், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல், சிவக்குமார் அளித்த புகாரின்பேரில், சங்கீதா மற்றும் முகமது முனீரா மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்துள்ள பெண்கள் இருவரும், பாலியல் தொந்தரவு செய்த சிவகுமார் மீது தாங்கள் கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்யாமல், தங்களை துன்புறுத்தி, சிவகுமாருக்‍கு சாதகமாக வழக்‍குப்பதிவு செய்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00