தமிழகத்தில் 5 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று - பலி எண்ணிக்‍கை 9 ஆயிரத்து 453 ஆக உயர்வு

Sep 29 2020 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 70 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்‍கை 5 லட்சத்து 91 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 546 பேர் வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் இதுவரை பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 9 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரேநாளில் ஆயிரத்து 277 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 29 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 501 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 209 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை - 572, சேலம் - 343, செங்கல்பட்டு - 330, திருவள்ளூரில் 279 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் - 186, காஞ்சிபுரம் - 159, திருப்பூர் - 153, நீலகிரியில் 149 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

நாமக்‍கல் - 140, திருநெல்வேலி - 127, ஈரோடு - 126, வேலூரில் 125 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00