சென்னையில் 2-வது நாளாக மண்டல வாரியாக அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மண்டலங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

Sep 29 2020 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக்‍கூட்டம் 2 வது நாளாக சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மண்டலங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.

​ சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழக அலுவலகத்தில் 2வது நாளாக இன்று ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்று வருகிறது. கழகப் பொருளாளர் திரு.P. வெற்றிவேல், கழக தலைமை நிலையச் செயலாளர்கள் திரு.கே.கே.உமாதேவன், திரு.ஆர். மனோகரன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான திரு.ஜி.செந்தமிழன், உள்ளிட்ட மாவட்டக்‍கழகச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்திற்கு பிறகு புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. E. மகேந்திரனிடம் தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

மதுரை புறநகர் வடக்‍கு மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்‍கு மாவட்டச் செயலாளர் திரு. C. சரவணனிடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

தேனி மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தேனி மாவட்டச் செயலாளர் திரு. M. முத்துசாமியிடம், தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.தேர்போகி V. பாண்டியிடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் திரு.V.D.N. ஆனந்திடம், தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00