விருதுநகர் அருகே ஜவுளித்தொழில் பூங்கா அமைக்‍க எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராமமக்‍கள் போராட்டம்

Sep 28 2020 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, ஜவுளி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரியாபட்டி அருகேயுள்ள தாமரைக்குளம்-பொட்டல்குளம் பகுதியில், சுமார் 100 ஏக்கரில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகள், கடந்த 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், திட்டப் பணிகள், கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், இன்று பணிகளை தொடங்க அதிகாரிகள் வந்ததால், விவசாயிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டால், விவசாய நிலம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் எனக் குற்றஞ்சாட்டி, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து, காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், ஏடிஎஸ்பி மாரிராஜன் ஆகியோர், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்று கிராம மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியதால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00