அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக அமைப்புச் செயலாளர், கடலூர் வடக்‍கு, சேலம் புறநகர் கிழக்‍கு உட்பட மாவட்டக்‍கழக நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியமனம்

Sep 28 2020 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக அமைப்புச் செயலாளர், கடலூர் வடக்‍கு, சேலம் புறநகர் கிழக்‍கு உட்பட மாவட்டக்‍கழக நிர்வாகிகளை, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக அமைப்புச் செயலாளராக திரு.E. மகேந்திரன் நியமிக்‍கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கடலூர் வடக்‍கு, சேலம் புறநகர் கிழக்‍கு, சேலம் வடக்‍கு, ஈரோடு மாநகர் மாவட்டக்‍கழக நிர்வாகிகள், பொதுக்‍குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களை, திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மேற்கு, தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி, வார்டு கழகச் செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவராக திரு.A. ஜெயபால் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளதாக திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி, குன்றத்தூர் ஒன்றியம், குன்றத்தூர் கிழக்கு, குன்றத்தூர் மேற்கு என பிரிக்‍கப்பட்டுள்ளது. குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

குன்றத்தூர் கிழக்‍கு ஒன்றியக்‍கழகச் செயலாளராக திரு. P. முத்தையா, குன்றத்தூர் மேற்கு ஒன்றியக்‍கழகச் செயலாளராக மலைப்பட்டு திரு.P. ராதாகிருஷ்ணன் ஆகியோரை, கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியக்‍கழகச் செயலாளர் திரு.EMS நடராஜன் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பு அணி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம் நகரம் - விழுப்புரம் வடக்‍கு, விழுப்புரம் தெற்கு என பிரிக்‍கப்பட்டுள்ளது.

விழுப்புரம் வடக்‍கு நகரக்‍கழகச் செயலாளராக திரு. D.T. நாகராஜ், விழுப்புரம் தெற்கு நகரக்‍கழகச் செயலாளராக திரு.P. சக்‍திவேல் முருகன் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் புறநகர், கோயம்புத்தூர் வடக்‍கு, மதுரை புறநகர் வடக்‍கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

கோயம்புத்தூர் வடக்‍கு மாவட்டம், பெரியநாயக்‍கன்பாளையம் பேரூர் கழகச் செயலாளராக திரு.S. முருகானந்தம் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூர் கழகச் செயலாளராக திரு.P. ரமேஷ், கெங்கவார்பட்டி பேரூர் கழகச் செயலாளராக திரு.K. முத்துராஜ் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00