நாங்குநேரி அருகே தலை துண்டிக்‍கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்‍குப்பதிவு - நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்

Sep 27 2020 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக 2 பெண்கள் தலைதுண்டிக்‍கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் 12 பேர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர், கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 10 நாட்களிலேயே, மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்கள் இருவர், நம்பிராஜன் தரப்பினரால் கொல்லப்பட்டனர். இதற்கு பழிதீர்க்‍கும் வகையில், நம்பிராஜனின் தாயார் சண்முகத்தாய், அவரது சகோதரி சாந்தி ஆகியோரை 12 பேர் கொண்ட மர்மக்‍கும்பல், நேற்று தலை துண்டித்து படுகொலை செய்துள்ளது. முகக்கவசம் அணிந்தபடி ஊர் முழுவதும் பெட்ரோல் குண்டு, நாட்டுவெடிகுண்டுகளை வீசி இந்தக்‍கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டதால் பொதுமக்‍கள் அச்சமடைந்தனர்.

சம்பவம் குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 12 பேர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இன்று காலை 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலையாளிகள் நெல்லை மாவட்டத்திலிருந்து தப்பித்து செல்லாத வண்ணம், எல்லைப் பகுதிகளில் காவல்துறை சார்பில் வாகன சோதனைச் சாவடி அமைக்‍கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகு அண்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00