மதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்

Sep 27 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் தனது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, அப்பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது மகள் கவிநிலாவிற்கும் சிவகாசியில் உள்ள பிரபல பேக்கரி கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரனின் மகன் துளசிராமிற்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 230 சவரன் நகைகளும், பின்னர் ​சீமந்தத்தின்போது 45 சவரன் நகைகளும் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். துளிசிராம்-கவிநிலா தம்பதிக்‍கு 2 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், துளசிராம், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்‍கு ஆளான கவிநிலா, பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் 45 லட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்த பெற்றோர், தனது பெண்ணை சிவகாசியில் உள்ள துளசிராம் வீட்டிற்கு பெண்ணை விட்டுவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி கவிநிலா தூக்‍கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00