இசைக் கலைஞராக மட்டுமின்றி மனிதநேயராகவும் வாழ்ந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - சக கலைஞர்கள் புகழாரம்

Sep 26 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்‍கு, நடிகர்கள், இயக்குனர் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாடகர் எஸ்.பி.பியின் மறைவால், தன் உலகம் சூன்யமாகிவிட்டதாக, அவரது நெருங்கிய நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். எல்லா துக்கத்திற்கும் அளவு இருக்கிறது, ஆனால் எஸ்.பி.பியின் பிரிவால் தற்போது ஏற்பட்ட இந்த துக்கத்திற்கு அளவே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வுலகில் இசை இருக்கும் வரை, எஸ்.பி.பியின் புகழ் இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கண்ணீருடன் விடை தருகிறோம், எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என உருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பியின் குரல் நம் இதயத்திலும், உயிரிலும் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பியின் மரணம் இசை உலகுக்கு உண்மையான இழப்பு என மளையாள நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி ஒரு உண்மையான இதிகாசத் தலைவர் என மளையாள நடிகர் மம்மூட்டி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

எஸ்.பி.பியுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்வதாகவும், அவரது குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பியின் மறைவு இசை ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றும், அவருக்கு மாற்றே இல்லை என்றும் இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.

உலக மக்களை தனது குரலால் மகிழ்ச்சிப்படுத்தியவர் எஸ்.பி.பி என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

மூச்சுக்காற்று முழுவதையும் பாடலோசையாக மாற்றியவர் என்றும், இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாகவும், பண்பின் சிகரமாகவும் வாழ்ந்தவர் எஸ்.பி.பி என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பியின் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி, குரலாய் இசையாய் மக்கள் மனதில் உலாவிக்கொண்டே இருக்கும் என்றும், எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

மிகவும் திறமையான கலைஞரை இழந்துவிட்டோம் என இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தி நடிகர் ஷாருக்கான், அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதாக தெரிவித்தார்.

தேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டது என இசையமைப்பாளர் அனிரூத் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பியின் குரலுக்கு வாயசைக்கும் பெரும் வாய்ப்பு தனக்கும் கிடைத்ததாகவும், அவரை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி இசை ஜாம்பவான் மட்டுமல்ல, மிகச்சிறந்த மனிதர் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00