பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்‍கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல்

Sep 25 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்‍கு, தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு என முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும் எனவும் அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்றும் துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், காலம் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர்த்திருப்பார் என கூறியுள்ளார்.

உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்காகவும் பாடிய திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது இனிய குரலால் அனைத்து தரப்பினரின் இதயங்களை கொள்ளை கொண்டவர் என்றும் அவரது இறப்பு தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்துகொண்டிருப்பார் எனவும் திரு. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மரணம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது என்றும் அவரது இழப்பு தமிழ் சமூகத்துக்கு மட்டுமல்ல, மொழி, இனம், மதம் தேசம் கடந்த யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00