பாடல், இசை, நடிப்பு என பல்துறையில் முத்திரைப் பதித்த எஸ்.பி.பி. - 4 மொழிகளில் தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் - உள்ளூர் முதல் கின்னஸ் வரை விருதுகளை அள்ளிக்‍குவித்த சாதனையாளர்

Sep 25 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர், தனியார் அமைப்பு விருதுகள் என ஏராளமான விருதுகளை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் வாங்கி குவித்துள்ளார்.

பன்மொழி பாடகர் எஸ்.பி.பி., 1979-ம் ஆண்டு "சங்கரா பரணம்" தெலுங்கு திரைப்படத்தில் 'ஓம்கார நாதானு" என்ற பாடலுக்காகவும், 1981-ம் ஆண்டு "ஏக் துஜே கே லியே" ஹிந்தி திரைப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' என்ற பாடலுக்காகவும், 1983-ம் ஆண்டு "சாஹர சங்கமம்" தெலுங்கு திரைப்படத்தில் 'தகிட ததிமி' என்ற பாடலுக்காகவும், 1988-ம் ஆண்டு "ருத்ர வீணா" தெலுங்கு திரைப்படத்தில் 'செப்பாலனி உண்டி" என்ற பாடலுக்காகவும், 1995-ம் ஆண்டு "சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவாய்" கன்னட திரைப்படத்தில் பாடியதற்காகவும், 1996-ம் ஆண்டு "மின்சார கனவு" தமிழ் திரைப்படத்தில் "தங்கத் தாமரை மலரே" என்ற பாடலுக்காகவும், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை வென்றார். 1981-ம் ஆண்டு "கலைமாமணி விருது" வழங்கி தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டார்.

2001-ம் ஆண்டு "பத்மஸ்ரீ" விருதும், 2011-ம் ஆண்டு "பத்ம பூஷண்" விருதும் வழங்கி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை கவுரவித்தது இந்திய அரசு. 1989-ம் ஆண்டு "மைனே பியார் கியா" ஹிந்தி திரைப்படத்தில் 'தில் தீவானா' என்ற பாடலுக்காகவும், 2007 ஆம் ஆண்டு "மொழி" தமிழ் திரைப்படத்தில் பாடியதற்காகவும் சிறந்த பின்னணி பாடகருக்கான "பிலம்பேர்" விருது எஸ்.பி.பிக்‍கு வழங்கப்பட்டது. 'அடிமைப் பெண்", 'சாந்தி நிலையம்', 'நிழல்கள்', 'கேளடி கண்மணி', 'ஜெய்ஹிந்த்' ஆகிய திரைப்படங்களில் பாடியதற்காக, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த பின்னணி பாடகருக்கான "தமிழக அரசு சினிமா விருது" வழங்கப்பட்டது.

1978 முதல் 2012 வரை தெலுங்கு திரைப்படங்களில் சிறந்த பின்னணி பாடகருக்கான மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான "நந்தி விருது" பல்வேறு திரைப்படங்களுக்காக பலமுறை வழங்கி கௌரவிக்கப்பட்டது. கர்நாடக அரசும் விருது வழங்கி கவுரவித்தது. பல பல்கலைக்கழகங்களிலிருந்து "கௌரவ டாக்டர் பட்டம்" மற்றும் பிற ஏராளமான விருதுகளையும் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்.பி.பி.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00