நடிகர் சங்கத் தேர்தல் வழக்‍கை மேற்கொண்டு விசாரிக்‍க நீதிபதிகள் மறுப்பு - வேறு அமர்வுக்‍கு மாற்ற தலைமை நீதிபதிக்‍கு பரிந்துரை

Sep 24 2020 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சங்கத் தேர்தல் வழக்‍கிலிருந்து நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகியுள்ளது. இந்த வழக்‍கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்‍கு மாற்ற தலைமை நீதிபதிக்‍கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கில், தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்‍கல் செய்த மனுக்‍கள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளை தொடர்ந்து நடத்துவது ஏன்? என புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நிலையில், இதே நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குளை எண்ண வேண்டும் என விஷால் தரப்பும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்தரப்பும் தெரிவித்து பதில் மனு அளித்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் ஆலோசனையை இரு தரப்பும் ஏற்க மறுத்ததால், தொடர்ந்து இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை எனக்‍கூறி, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00