தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி

Sep 25 2020 8:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயலும் மாணவ, மாணவிகளில் விருப்பப்படும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றும், பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்கள் வந்து, பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டுச் செல்லலாம் என்றும், பள்ளியில் பணியாற்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00