பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? - மணல் கொள்ளை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி

Sep 24 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்‍கும் அளவுக்‍கு மணல் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்‍கைகள் என்ன? என்றும், ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்‍கு, உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து மண் அள்ளி வருவதை தடுக்க கோரிய வழக்கில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், தெற்கு கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த திரு.சிவசங்கரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர், காணொலி வாயிலாக ஆஜராகி அறிக்‍கை தாக்‍கல் செய்தனர். இதையடுத்து, நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது - இந்த அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? - பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் மணல் கொள்ளை நடைபெற்றது தெளிவாக தெரிகிறது - இவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ள சூழலில் கிராம நிர்வாக அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் என்ன? - எத்தனை டன் மணல் கொள்ளை போயிருக்கும்? - இந்த வழக்கில் எத்தனை லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது? மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட எத்தனை பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என அடுக்‍கடுக்‍கான கேள்விகளை எழுப்பினர். மேலும், லாரிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? - எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? அவர்களில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? - காவல்துறை அதிகாரிகள், கனிம வளத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? எனவும் வினவினர். நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் திணறினர். இதைத்தொடர்ந்து கேள்விகளுக்‍கான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00