பேரறிவாளனுக்‍கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு - தமிழக அரசு, சிறைத்துறை நிராகரித்த நிலையில் நீதிமன்றம் ஆணை

Sep 24 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு 90 நாள்கள் விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயார் திருமதி அற்புதம்மாள், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தார். தனது மகன் இருக்‍கும் புழல் சிறையில் 50 கைதிகள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்புகள் உள்ளதால், கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் உள்ளதாகவும், எனவே அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்றும் திருமதி. அற்புதம்மாள் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. என்.கிருபாகரன், திரு. வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமா்வு முன்னிலையில் விசாரணைக்‍கு வந்தது. பேரறிவாளன் கடந்த ஜனவரி மாதம் விடுப்பில் சென்றதால், சிறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் சாதாரண விடுப்பு வழங்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்க உத்தரவிட்டனர். ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00