சட்டப்பேரவையில் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட இரண்டாவது உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 24 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவைக்‍குள் தி.மு.க உறுப்பினர்கள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்‍குழு அனுப்பிய நோட்டீசுக்‍கு இடைக்‍கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், கடந்த 2017-ம் ஆண்டு குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்கு எடுத்து வந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு, சட்டமன்ற உரிமைக்‍குழு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக திமுக.வினர் தொடர்ந்த வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து, திமுக உறுப்பினர்களுக்கு இரண்டாவது முறையாக உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. புஷ்பா சத்தியநாராயணா இன்று உத்தரவிட்டுள்ளார். பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்‍குழு தலைவர் ஆகியோர் பதிலளிக்‍க உத்தரவிட்ட நீதிபதி, வழக்‍கு விசாரணையை வரும் அக்‍டோபர் 28ம் தேதிக்‍கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00