ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்‍கில் யுவராஜின் ஜாமின் மனு மீண்டும் நிராகரிப்பு - தமிழகத்திலும் ஆணவப்படுகொலைகள் நடக்கின்றனவா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

Sep 22 2020 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்திலும் ஆணவப்படுகொலைகள் நடக்கின்றனவா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வழக்‍கில் யுவராஜின் ஜாமின் மனு நிராகரிக்‍கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்‍கில், முக்கியக் குற்றவாளியான தீரன் சின்னமலை அமைப்பின் தலைவர் யுவராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்‍கில் யுவராஜ் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஆணவ படுகொலைகள் நடைபெறுகின்றனவா? என தலைமை நீதிபதி மிகுந்த ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பினார். உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் தான் இதுபோன்ற படுகொலைகள் நடைபெறுவதாக நினைத்ததாகவும், ஆனால் தமிழகத்திலும் இதுபோன்ற படுகொலைகள் நடைபெறுகின்றதா? எனவும் அவர் ஆச்சரியம் அடைந்தார். இதுபோன்ற ஆணவப் படுகொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து யுவராஜின் ஜாமின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த படுகொலை வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00